உலகம்
பிரித்தானியாவுடன் பிரிந்து வேறு நாட்டுடன் இணையும் தீவு
பிரித்தானியாவுடன் பிரிந்து வேறு நாட்டுடன் இணையும் தீவு
பிரித்தானிய தீவு ஒன்று, பிரித்தானியாவிலிருந்து பிரிந்து வேறொரு நாட்டுடன் இணைய திட்டமிட்டுவருகிறது.
ஆர்க்னீ தீவுகள் (Orkney Islands), முன்பு நார்வே மற்றும் நெதர்லாந்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தவை. 1472ஆம் ஆண்டு அவை ஸ்கொட்லாந்தின் ஒரு பகுதியாகின.
ஆனால், இப்போது மீண்டும் அவை நார்வே நாட்டுடன் இணைய திட்டமிட்டு வருகின்றன.
அது தொடர்பாக ஆர்க்னீ தீவுகளின் கவுன்சிலர்கள் இன்று கூடி விவாதிக்க இருக்கிறார்கள்.
தங்களை பிரித்தானிய அரசும் சரி, ஸ்கொட்லாந்தும் சரி கைவிட்டுவிட்டன என்கிறார் ஆர்க்னீ கவுன்சில் தலைவரான James Stockan.
ஸ்கொட்லாந்தின் பிற பகுதிகளுக்குக் கிடைக்கும் நிதி முதலான உதவிகள் எங்களுக்குக் கிடைப்பதில்லை என்று கூறும் அவர், நாம் எப்போது மீண்டும் நார்வேயுடன் இணையப்போகிறோம் என மக்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்கிறார்.
You must be logged in to post a comment Login