Connect with us

அரசியல்

ஆளுநரின் அணிக்கு எதிராக குரல் கொடுங்கள்! – சாணக்கியனுக்கு கடிதம்

Published

on

Sanakkiyan

இன ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் கிழக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கைகளை நிறுத்தக் குரல் கொடுக்குமாறு கோரி ஏறாவூரிலுள்ள மஸ்ஜிதுர் றிபாய் பள்ளிவாசல் நிருவாகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்  சாணக்கியனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“புன்னைக்குடா வீதி” என்ற பெயருடன் பயன்படுத்தப்படும் இவ்வீதியானது ஏறாவூர்; நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் ஆரம்பித்து சுமார் 5.23 கிலோமீற்றர் நீண்டு சென்று புன்னைக்குடா கடற்கரையில்
முடிவடைகின்றது.

இவ் வீதி அமைந்துள்ள பிரதேசம் முழுவதிலும் 99 சதவீதமாக தமிழ் முஸ்லிம் மக்களே நிறைந்து வாழ்கின்றனர்.

இவ் வீதிக்கு பெயரிடக்கூடிய எத்தனையோ தமிழ், முஸ்லிம் பிரமுகர்கள் இப்பிரதேசத்தில் வாழ்ந்து மறைந்த போதிலும் இதில் யாரேனும் ஒரு தனிநபரின் பெயரைச் சூட்டுவதன் மூலம் ஓர் இன மக்கள் மனம் நொந்து கொள்வார்கள் என்பதால்; பொதுவான “புன்னைக்குடா வீதி” என்ற பெயரையே மிக நீண்டகாலமாகவே பயன்படுத்தி வருகின்றனர்.

இலங்கையின் வரைபடத்திலும் ஆங்கிலேயர் ஆட்சிக்கால காணி உறுதிகளிலும் இவ் வீதி புன்னைக்குடா வீதி என்ற பெயரிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் தென்பகுதியைச் சேர்ந்த சுனில் ஆரியபால என்பவரின் தலைமையில் சிலர் ஒப்பமிட்டு கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றின் மூலம் மிகப் பழைமை வாய்ந்த புன்னைக்குடா வீதி என்னும் பெயரை எல்மிஸ் வல்கம “Elmis Walgama” என பெயர் மாற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநரும் இதனைக் கவனத்தில் கொண்டு சில தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. ஆளுநரின் செயற்பாட்டை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

எனவே தயவுசெய்து தாங்கள் இவ்விடயத்தில் கரிசனை செலுத்தி, இப்பகுதியில் இன நல்லுறவுக்கு குந்தகம் ஏற்படுத்தும் இவ் வீதிப் பெயர்மாற்ற நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தி தொடர்ந்தும் புன்னைக்குடா வீதி என்னும் பெயரிலேயே இவ்வீதி அழைக்கப்படவும், சகல இன மக்களின் நல்லுறவு பேணப்படவும் வழிசமைக்குமாறு தயவாகக் கேட்டுக்கொள்கின்றோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே கடிதம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

3) பயங்கரவாத தடைச்சட்டத்துக்கான மாற்றீடு பயங்கரமானது

எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரம்பும்நிலையங்களுக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை இரவுவேளையில் திடீரென முளைத்த வரிசை, ஒருசில மணிநேரத்துக்குள் காணாமற்போய்விட்டது. சிலோன் பெற்ரோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்தன.

அதனையடுத்தே இவ்வாறான நிலைமை ஏற்பட்டிருந்தது. தொழிற்சங்க போராட்டத்தால், கொலன்னாவையில் அமைந்துள்ள சிலோன் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சேமிப்பு முனைத்தில் இருந்து பௌசர்கள் வெளியேறவில்லை.

வெற்று பௌசர்களும் உள்நுழைய அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், நீண்ட விடுமுறை நாட்களில் தாங்கள் சிக்கிக்கொள்வோமென பலரும் சிந்தித்தனர். முன்கூட்டியே எரிபொருள்களை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நிற்கத்தொடங்கிவிட்டனர்.

எனினும், இராணுவத்தை அதிரடியாக களமிறக்கிய அரசாங்கம், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகளை எடுத்தது. எரிபொருள்களும் சீராக விநியோகிக்கப்பட்டன.

போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் உள்ளிட்ட அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளை முடக்குவதற்காக இராணுவம் களமிறக்கப்பட்டமை இது முதல் தடவையல்ல. இந்நிலையில்தான், வீதிக்கு இறங்குவோரை பயங்கரவாதிகளாவும், போராட்டங்களில் ஈடுபடுவோரை அரசாங்கத்துக்கு எதிராக சதிசெய்வோர் என்றும் சித்திரிக்கும் வகையிலான
நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்ளை முன்வைத்துள்ளன.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என்பதையே ஐ.நா வலியுறுத்தியிருந்தது, எனினும், அதில் திருத்தங்களை  மேற்கொண்டிருக்கும் அரசாங்கம் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயங்கரமானதென இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்..

வீதியில் இறங்குவோரை பயங்கரவாதிகளாக சித்திரிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ள தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜே.வி.பியின் உறுப்பினருமான விஜித ஹேரத், இந்த சட்டத்தை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாக எச்சரித்துள்ளன.

இந்த சட்டம் இன்னும் அமுல்படுத்தப்படவில்லை எனினும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையிலான தீர்மானங்களையே அரசாங்கம் எடுத்துள்ளது. கடமைக்கு சமூகமளிக்க தவறிய தொழிற்சங்க தலைவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தில் அன்மையில் உரையாற்றியிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, போராட்டங்களை முன்னெடுப்பதற்கு சகலருக்கும் உரிமையுண்டு, எனினும், அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் யாராவது செயற்படுவார்களாயின் அவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்கவும்
தயங்கமாட்டேன் என எச்சரித்திருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளால் மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், இலாபத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் செயற்றிட்டங்கள் துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் நாட்டு வளங்கள் தொடர்பிலான சந்தேகம் வலுப்பெற்றுள்ளதென எச்சரித்துள்ளன.

காலவோட்டத்துக்கு ஏற்றவகைளில் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது அவசியம். எனினும், அவை ஜனநாயகரீதியிலான போராட்டங்களை நசுக்கி, ஒடுக்குவதாய் அமைந்துவிடக்கூடாது என்பதே எமது வலியுறுத்தலாகும்.

#SriLankaNews

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்4 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 18.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 18, 2024, குரோதி வருடம் வைகாசி 5, சனிக் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள உத்திராடம், திருவோணம்...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்1 நாள் ago

​இன்றைய ராசி பலன் 17.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 17, 2024, குரோதி வருடம் வைகாசி 4 வெள்ளிக் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள பூராடம், உத்திராடம்...

Rasi Palan new cmp 13 Rasi Palan new cmp 13
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 16, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 15.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 15, 2024, குரோதி வருடம் வைகாசி 2, புதன் கிழமை, சந்திரன் கடகம், சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம், தனுசு ராசியில் உள்ள...

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 14.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 14.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 14, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 10 Rasi Palan new cmp 10
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp 9 Rasi Palan new cmp 9
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 12.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 12.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 12, 2024, குரோதி வருடம் 29,...