தொழில்நுட்பம்
வாட்ஸ்ஆப் பாதுகாப்பானது!
ஐபோன் மற்றும் மேம்பட்ட ஐமெசேஜ் ஆப் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிரான கருத்துக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இதோடு தான் சொந்தமாக நடத்தி வரும் வாட்ஸ்அப் செயலி பயனர்களுக்கு அதிக பாதுகாப்பான மற்றும் நம்பத்தகுந்த சூழலை வழங்கி வருவதாக தெரிவித்து இருக்கிறார். இத்துடன் ஐமெசேஜ் செயலியுடன் வாட்ஸ்அப் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கிறது என்பதையும் தெரிவித்து இருக்கிறார்.
வாட்ஸ்அப் வழங்கி வரும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் சேவையை விளம்பரப்படுத்தும் வகையிலும், புளூ மற்றும் கிரீன் நிற சாட் பபுள்கள் மூலம் ஆப்பிள் ஐமெசேஜை சீண்டும் வகையிலான வரைபடத்தை மார்க் ஜூக்கர்பர்க் பகிர்ந்து இருக்கிறார். ஐமெசேஜ் உடன் ஒப்பிடும் போது தனியுரிமை மற்றும் பாதுகாப்பை வழங்குவதில் வாட்ஸ்அப் சிறப்பானது என அவர் தெரிவித்து இருக்கிறார்.
வாட்ஸ்அப்-இன் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்குகிறது. மேலும் க்ரூப் சாட்களிலும் இந்த அம்சம் தொடர்ந்து செயல்படும் என அவர் மேலும் தெரிவித்தார். ஒரு பட்டனை க்ளிக் செய்ததும், புது சாட்களை மறைந்து போகச் செய்யும் வசதி வாட்ஸ்அப்-இல் வழங்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
இன்னமும் ஐமெசேஜ் செயலியில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி வழங்கப்படவில்லை. மார்க் ஜூக்கர்பர்க்-ஐ தொடர்ந்து வாட்ஸ்அப் தலைவர் கேத்கார்ட் தனது ட்விட்டரில், வாட்ஸ்அப் மற்றும் ஐமெசேஜ் செயலிகளை ஒப்பிட்டுள்ளார். இதில் ஐமெசேஜ் செயலியில் மறைந்து போகச் செய்யும் அம்சம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து இருக்கிறார். மெட்டா மட்டும் இன்றி சமீபத்தில் கூகுள் நிறுவனமும் ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் கருத்துக்களை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
#technology
You must be logged in to post a comment Login