அரசியல்
21வது சட்டமூலம்! – மொட்டுக்குள் மோதல் ஆரம்பம்
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
கட்சியின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு இல்லாமல் ஆக்கப்படுவது மற்றும் ஜனாதிபதி அதிகாரங்களில் ஒரு பகுதியை பிரதமருக்கு பகிர்வது தொடர்பிலேயே இவ்வாறு முரண்பாடு உருவாகியுள்ளது.
குறிப்பாக இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் எம்.பி. பதவியை இழக்கும், ஏற்பாட்டை – ஸ்ரீலங்கா பஸிலின் சகாக்கள் எதிர்க்கின்றனர்.
ஜனாதிபதி அமைச்சு பதவிகளை வகிக்க முடியாது என்ற ஏற்பாட்டை ஜனாதிபதிக்கு சார்பான மொட்டு கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கின்றனர். இதனால் வாக்கெடுப்பின்போது பிளவு வெளிப்படையாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் பிரதமர் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மொட்டு கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். 21 ஐ இறுதிப்படுத்தும் முக்கிய கூட்டமொன்று எதிர்வரும் 03 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login