இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
இலங்கைசெய்திகள்

வீழ்ச்சியடைந்துள்ளது இலங்கை ரூபாவின் பெறுமதி!

Share

இவ்வருட தொடக்கத்தில் இருந்து மே 12ஆம் திகதி வரை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 44.3 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

குறிப்பாக, இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து செலாவணி விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது என மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அந்நியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நீண்ட நேர மின்வெட்டும் தொடர்கின்றது. மருந்துப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவத்துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு வருடத்துக்கு முன்பு இருந்ததைவிட தற்போது 30 வீதம் அதிகமான பணத்தை உணவுக்காக மக்கள் செலுத்த நேரிட்டுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மே 12ஆம் திகதி வரை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 44.3 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...