தமிழ் மற்றும் இந்தித் திரையுலகில் வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குநர் அட்லீ, தற்போது தெலுங்கு சூப்பர்ஸ்டார் அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் புதிய படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் ஷாருக் கான் நடித்து 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த ‘ஜவான்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்த பொலிவூட் நட்சத்திரம் தீபிகா படுகோன், இந்தப் புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தீபிகா படுகோன் குறித்துப் பேசிய அட்லீ, தீபிகா படுகோனைத் தனது ‘லக்கி சார்ம்’ (Lucky Charm) என அவர் வர்ணித்துள்ளார். அவர் படத்தில் இருப்பது ஒருவித வெற்றி ராசியைத் தருவதாக அட்லீ நம்புகிறார்.
இந்தப் படத்தில் தீபிகா இதுவரை பார்த்திராத வகையில் மிகவும் ‘பிரெஷ்’ (Fresh) ஆகவும், முற்றிலும் புதிய தோற்றத்திலும் தோன்றுவார் என உறுதியளித்துள்ளார்.
ஜவான் படத்தில் தீபிகாவின் நடிப்பு குறுகிய நேரமே வந்தாலும் அனைவரையும் கவர்ந்தது போல, இந்தப் படத்திலும் அவரது கதாபாத்திரம் பேசப்படும் என அட்லீ தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜுனின் ஸ்டைலான நடிப்பு, அட்லீயின் பிரம்மாண்ட மேக்கிங் மற்றும் தீபிகாவின் திரை இருப்பு ஆகிய மூன்றும் இணைவதால், இந்தியத் திரையுலகில் இப்படம் ஒரு புதிய வசூல் சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.