சினிமா
விஜய் பட நாயகியை தட்டித் தூக்கிய சூப்பர் ஸ்டார்.!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகின்றார். இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவிலேயே காணப்படுகின்றது.
கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் சத்யராஜ் 38 வருடங்களுக்குப் பிறகு கூட்டணி வைத்துள்ளார். மேலும் இதில் ஸ்ருதிஹாசன், நாகர்ஜுனா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைப்பதோடு இந்த படம் எதிர்வரும் மே மாதம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது.
கூலி படத்தை தொடர்ந்து மூன்று மாதங்கள் ஓய்வு எடுப்பதற்கு ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். அந்த நேரத்தில் தனது சுய சரிதையை எழுதவும் முடிவெடுத்துள்ளார் என்ற தகவல் வெளியானது. அத்துடன் ரஜினி நடிப்பில் ஜெயிலர் 2 படமும் ரெடியாகி வருகிறது.
ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் தமன்னா ஆடிய பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி இந்த படம் அமோக வரவேற்பு பெறுவதற்கே காரணமாக அமைந்தது. இது இந்திய அளவில் மட்டும் இல்லாமல் உலக அளவிலேயே ட்ரெண்டிங்கில் காணப்பட்டது.
இந்த நிலையில், கூலி படத்தில் இடம்பெற உள்ள ஒரு பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் விஜய் நடிக்கும் ஜனநாயகன்பட ஹீரோயின் ஆன பூஜா ஹெக்டே ஆட இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.