சினிமா
ரசிகர்கள் காத்திருந்த விடாமுயற்சி படம் எப்போது ரிலீஸ் தெரியுமா.. வெளிவந்த அப்டேட்
ரசிகர்கள் காத்திருந்த விடாமுயற்சி படம் எப்போது ரிலீஸ் தெரியுமா.. வெளிவந்த அப்டேட்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் எப்போது ரிலீஸ் என்கிற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.
இந்த பொங்கலுக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு அஜித்தின் கார் ரேஸ் ஆறுதலாக இருந்தது.
மேலும் இன்று விடாமுயற்சி படத்தின் ட்ரைலர் வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகும் என தகவல் தெரிவிக்கின்றனர். இன்று வெளிவரும் ட்ரைலரில் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.