10 31
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இறுதி முடிவு

Share

மின் கட்டண திருத்தம் குறித்து இறுதி முடிவு

மின்கட்டண திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17) வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது மின் கட்டணத்தை குறைப்பதா அல்லது தற்போது நடைமுறையிலுள்ள கட்டண முறையை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதா என்பது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட உள்ளது.

குறித்த விடயம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (Public Utilities Commission of Sri Lanka (PUCSL) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2025 ஜனவரி மாதம் முதல் எதிர்வரும் ஜூன் மாதம் வரையான ஆறு மாத காலப்பகுதிக்கு தற்போது நடைமுறையிலுள்ள மின் கட்டண நடைமுறையை அவ்வாறே முன்னெடுத்துச் செல்ல மின்சார சபை யோசனை முன்வைத்துள்ளது.

இந்த யோசனை தொடர்பில் கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதியிலிருந்து ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் மக்கள் கருத்துக் கணிப்புகளை முன்னெடுக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.

அந்தக் கருத்துக் கணிப்புகள் கடந்த 10 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

இதன்போது மின் கட்டணத்தை 20 – 30 சதவீதத்தால் குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த கருத்துக் கணிப்பில், மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட மின் கட்டண திருத்த யோசனை மற்றும் அதுதொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஊழியர்களினால் மேற்கொள்ளப் பட்ட மதிப்பாய்வின் பின்னர் தயாரிக்கப்பட்ட யோசனை வரைவு தொடர்பில் பொதுமக்கள் உள்ளிட்ட தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் யோசனைகள் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதற்கமைய, மின் கட்டணத்தை குறைப்பதா அல்லது தற்போது நடைமுறையிலுள்ள கட்டண முறையை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதா என்பது தொடர்பான தீர்மானத்தை நாளை மறுதினம் அறிவிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 1
இலங்கைசெய்திகள்

சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை: வெள்ளப் பகுதிகளின் கண் தொற்றுகள் பரவும் அபாயம் – மக்கள் அவதானம்!

வெள்ள அனர்த்தத்தைத் தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களில் கண் தொற்றுகள் (Eye Infections) எளிதில் பரவக்கூடும்...

25 69340bc828c36
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவில் அதிர்ச்சி: 38 நோயாளிகளிடம் அத்துமீறிய மருத்துவர் மீது 45 பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு!

பிரித்தானியாவில் மருத்துவராகப் பணியாற்றிவந்த ஒருவர், 13 வயதுக்குக் குறைவான பிள்ளைகள் உட்பட 38 நோயாளிகளிடம் அத்துமீறியதாக...

25 69341a3e0ac8b
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி கோமா நிலை: தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது கீழே விழுந்தாரா? முரண்பட்ட தகவல்கள்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கும் மேலாகக் கோமா...