14 4
இலங்கைசெய்திகள்

ஆட்டநாயகன் பரிசை நன்கொடையாக வழங்கிய மஹீஸ் தீக்‌ஷன

Share

ஆட்டநாயகன் பரிசை நன்கொடையாக வழங்கிய மஹீஸ் தீக்‌ஷன

லங்கா பிரிமியர் லீக் போட்டியில் வென்ற பரிசுத்தொகையை புற்று நோய் நிதியத்திற்கு இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் மஹீஸ் தீக்‌ஷன நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இலங்கையில் தற்பொழுது நடைபெற்று வரும் லங்கா பிரிமியர் லீக் போட்டித்தொடரின் போட்டியொன்றில் தீக்‌ஷன ஆட்ட நாயகனாக தெரிவாகியிருந்தார்.

கால் மார்வல் அணியின் சார்பில் விளையாடி வரும் தீக்‌ஷன, தம்புள்ள அணிக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவானமைக்காக தீக்‌ஷனவிற்கு 1500 அமெரிக்க டொலர்கள் பணப்பரிசாக வழங்கப்பட்டது.

இந்த பரிசுத் தொகையை தாம் இந்திரா புற்று நோய் நிதியத்திற்கு வழங்குவதாக தீக்‌ஷன அறிவித்துள்ளார்.

மார்பக புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நோய் சிகிச்சைக்காகவும் இந்த நிதியம் நிதி திரட்டி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...