இலங்கை
முக்கிய அரச நிறுவனங்களை விற்பனை செய்ய முயற்சி
முக்கிய அரச நிறுவனங்களை விற்பனை செய்ய முயற்சி
நாட்டின் முக்கியமான அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக முன்னிலை சோசலிச கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கட்சியின் கல்விச் செயலளார் புபுது ஜாகொட இந்த குற்றச்சாட்டைச் முன்வைத்துள்ளார்.
புத்தாண்டில் அரசாங்கம் முதல் பணியாக அரச நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
புத்தாண்டுக்கு முன்னதாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை மின்சாரசபையை பல துண்டுகளாக பிளவாக்கி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பைன செய்யும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரச வங்கிகளை விற்பனை செய்யவும், அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்களுக்கு சலுகைகளை வழங்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பன கூட்டாக இணைந்து அரச வங்கிகள் குறித்து எடுத்துள்ள தீர்மானத்தை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இலவச கல்வி முறைமையை இல்லாதொழிக்கும் நோக்கில் கொதலாவ பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பணம் செலுத்தி மருத்துவ பட்டத்தைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மக்களின் பிரதான சொத்துக்களில் ஒன்றான மின்சார வசதி, வங்கிக் கட்டமைப்பு மற்றும் இலவச கல்வி என்பனவற்றை கொள்ளையிட்டே அரசாங்கம் புத்தாண்டை ஆரம்பிக்கின்றது என புபுது ஜாகொட குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடக சந்திப்பு ஒன்றில் பங்குபற்றி உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.