உலகம்
ஹமாஸின் சுரங்கப்பாதை 80 சதவீதம் அப்படியே உள்ளது: திணரும் இஸ்ரேலிய படைகள்
ஹமாஸின் சுரங்கப்பாதை 80 சதவீதம் அப்படியே உள்ளது: திணரும் இஸ்ரேலிய படைகள்
ஹமாஸ் படைகளின் 80% சுரங்கப்பாதை அமைப்புகள் காசாவுக்கு கீழ் அப்படியே இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் படைகளை எதிர்த்து இஸ்ரேலிய படைகள் காசாவிற்கு நுழைந்து தாக்குதல் நடத்த ஆரம்பித்ததில் இருந்தே, ஹமாஸ் அமைப்பினரின் மிகப்பெரிய பலமாக கருதப்படும் சுரங்கப்பாதை தொடர்புகளை கண்டறிந்து அழிக்க இஸ்ரேலிய படைகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
காசாவுக்கு கீழ் வலைப்பின்னல் வடிவில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த சுரங்கப்பாதை அமைப்புகளுக்குள் தான் ஹமாஸ் வீரர்கள் மற்றும் பிணைக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாக நம்பப்படுகிறது.
எனவே அதனை கண்டறிந்து அழிக்கும் வேலையில் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் செயல்பட்டு வருகின்றனர். இதற்காக கடல் நீரை சுரங்கப்பாதைகளில் பீய்ச்சியடிக்கும் வேலைகளை கூட இஸ்ரேலிய வீரர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சுரங்கப்பாதை அமைப்புகளை நன்கு அறிந்த அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ள தகவலில், காசாவில் ஹமாஸ் படையினர் அமைந்துள்ள சுரங்கப்பாதை வலையமைப்பில் 80% அப்படியே உள்ளது என கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய படைகளின் முதன்மையான நோக்கங்களுக்கு இவை இடையூறாக இருந்து வருகின்றன.
ஹமாஸ் தலைவர்கள் பதுங்கி இருப்பதாக நம்பப்படும் 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலான சுரங்கப்பாதை அமைப்புகளை இஸ்ரேலிய படைகள் கண்டறிந்து அழித்து அல்லது செயலிழக்க செய்து வருகின்றனர்.
மேலும் மீதமுள்ள சுரங்கப்பாதைகளை கண்டறிவும் தொடர்ந்து படைகள் முயற்சித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.