உலகம்
பிரித்தானியாவில் சிறு வயதில் சாதனை படைத்த இலங்கை சிறுமி
பிரித்தானியாவில் சிறு வயதில் சாதனை படைத்த இலங்கை சிறுமி
பிரித்தானியாவின் பிரிஸ்டலில் நடைபெற்ற 11வது MTM Young Achievers மற்றும் MTM Young Achievers விருது வழங்கும் நிகழ்வில் இலங்கை வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கையை சேர்ந்த 15 வயதான யெனுலி பினாரா என்ற சிறுமி, 2023 MTM YOUNG ACHIEVERS விருதை வென்றுள்ளார்.
இந்த விழாவானது 25ஆம் திகதி பிரித்தானியாவின் பிரிஸ்டல் மேரியட்டில் உள்ள டெல்டா ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.
பல்வேறு வகையான திறமைகளை கண்காளும் வகையில் நடாத்தப்பட்ட இந்த போட்டியில் பங்குக் கொண்டுள்ள போட்டியாளர்களின் மத்தியில் மிகவும் வயது குறைந்த ஒரு சிறுமி என்றால் இவர் தான் என கூறப்படுகிறது.
இந்ந விருதானது இறுதிச் சுற்றில் போட்டியாளராக தெரிவு செய்யப்பட்ட யெனுலிக்கு வழங்கப்படுள்ளது. பல உலக நாடுகளில் இருந்து வந்த போட்டியாளர்களின் மத்தியில் வழங்கப்படுள்ளன.
இலங்கையில் கொழும்பு பிரதேசத்தில் பிறந்த யெனுலி, தற்போது தனது தாய் தந்தையருடன் பிரித்தானியாவில் வசித்து வந்துள்ளார். இதற்கு முன்னர் ஓமானில் உள்ள இலங்கை பாடசாலையில் கல்வி கற்றுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில், இசை, பாடல், பேச்சு, நடிப்பு என பல துறைகளில் பல நாடுகளில் பல போட்டிகளில் அவர் வெற்றிப் பெற்றுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
12 வயதில், நூறு என்ற சர்வதேச அமைப்பின் உலகின் இளைய தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் இது ஒரு சிறந்த புதிய உலகத்தை உருவாக்குவதற்கான எனது பயணத்திற்கு ஒரு பெரிய சாதனை மற்றும் உந்துதல் என விருதை வென்ற சிறுமி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.