உலகம்
காதலுக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமாக கொலை.., இந்திய ஊழியர் கைது
காதலுக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமாக கொலை.., இந்திய ஊழியர் கைது
ஒருதலைக்காதலால், கர்நாடகாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் உள்ள 4 பேரை கொலை செய்த ஏர் இந்தியா ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய மாநிலம், கர்நாடாகாவில் உள்ள பெலகாவி மாவட்டம், குடாச்சியைச் சேர்ந்தவர் ஹசீனா(46). இவருக்கு அஃப்னான்(23), அய்னாஸ்(23), அசெம்(12) என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இவருடைய கணவர் துபாயில் பணிபுரிந்து வருவதால் தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் உறவினர் ஹாஜிரா(70) என்பவருடன் குடாச்சியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 12 -ம் திகதி ஹசீனாவின் வீட்டிற்குள் மர்மநபர் ஒருவர் புகுந்து, அவரது குடும்பத்தினரை கத்தியால் சரமாரி தாக்கினார்.
இதில் ஹசீனா மற்றும் அவரது மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர். உறவினரான ஹாஜிரா படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது இந்த கொலைக்கான காரணமானவர், ஏர் இந்தியாவின் கேபின் க்ரூவாக பணியாற்றிய பிரவீன் அருண் கௌகுலே(35) என்று கண்டுபிடித்தனர்.
இதில் பிரவீன் அருண் கௌகுலே ஒருதலையாக அய்னாஸை காதலித்து தெரியவந்தது. ஆனால், இவர் காதலுக்காக கொலைசெய்தாரா அல்லது வேறு காரணத்திற்க்காக கொலை செய்தாரா என்ற கோணத்தில் பொலிஸார் அவரை தேடி வந்தனர்.
இதனைத்தொடர்ந்து, குடாச்சியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பிரவீனை பொலிஸார் இன்று கைது செய்தனர். மேலும், அவரை உடுப்பி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.