வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலை முகாமையாளர் எதிர்ப்பை மீறியும் மேலதிகாரிக்கு அறிவிக்காமலும் திடீரென சாலைக்குச் சென்ற நிலையில் ஏற்பட்ட கைகலப்பினால் 11 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தனர். 11 பேரையும் கடுமையாக எச்சரித்த...
யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் நடாத்தப்பட்ட படுகொலையின் 35 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் திங்கட்கிழமை நடைபெற்றது. காங்கேசன்துறை வீதியிலுள்ள கொக்குவில் இந்துக் கல்லூரியின் மைதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று காலை...
இனப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசியலமைப்பினூடாக ஒரு வருட காலத்திற்குள்ளே செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்....
சீனாவினால் நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்பட்ட 500 மெட்ரிக் தொன் அரிசித் தொகை நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த அரிசித் தொகை இலங்கையின் ஆதரவற்ற பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான சீனத்...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் – வேரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திருடுவதற்கு சென்ற திருடர்கள் அங்கு சமைத்து சாப்பிட்டு ஓய்வெடுத்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இன்று குறித்த வீட்டிற்கு திருடச் சென்ற திருடர்கள்...
இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில், 18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 50 பேருக்கும் அதிகமானவர்கள் எச்ஐவி தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ராசாஞ்சலி...
அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள சேமநலத் திட்டத்தின் பயன்களை பெற்றுக் கொள்வதற்காக, இதுவரையிலும் 38 இலட்சம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்திற்கு, எதிர்வரும் 28ம் திகதி வரை விண்ணப்பங்களை...
வடமாகாண ரீதியில் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்பட்டு வரும் வடக்கின் சமர் தொடரின் இன்றைய (26) போட்டிகளில் வதிரி டைமன்ஸ், மனோகரா அணிகள் வெற்றி பெற்றுள்ளன. முதலாவது போட்டியில் வதிரி டைமன்ஸ் வி.கழத்தை எதிர்த்து...
சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணையின் படி மின்சார கட்டணத்தை மீண்டும் 30 வீதத்தால் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் இதை தெரிவித்தார். கடந்த 15ம் திகதி முதல்,...
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர் என்று குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடையை எதிர்வரும் நவம்பர் மாதம் 24ஆம்...
இலங்கையில் நிலவும் மருந்து பொருட்கள், ஒருமுறை பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு போன்ற காரணங்களால் சுகாதார சேவை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் எச்சரித்துள்ளது. மேற்குறிப்பிட்ட காரணங்களால் அவசர மற்றும் பொது...
யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 90 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இன்று(23) அதிகாலை 2 மணியளவில் மாதகல் கடற்கரையோரமாக குறித்த கஞ்சா...
முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை மற்றும் விலங்கு உணவுத் தட்டுப்பாடு காரணமாக, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை தட்டுப்பாடு ஏற்படலாம் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர். எம். சரத் ரத்நாயக்க தெரிவித்தார்....
வைத்தியசாலைகளிலும் ஏனைய சுகாதார நிலையங்களிலும் புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பற்றாக்குறை காரணமாக புற்றுநோய் சிகிச்சை பிரிவுகளில் அதிகளவான நோயாளிகள் இக்கட்டான நிலையில் உள்ளனர் என்று அரசாங்க மருந்தாளர்...
தோட்டக் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று உடற்கூற்று பரிசோதனையின் பின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இருவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியபோதும் மதுசாரம் மற்றும் ஐஸ் போதைப்பொருளை...
மட்டக்களப்பு – கொக்குவில் – முகத்துவாரம் ஆற்றுவாய் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது மின்னல் தாக்கியதில், ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முகத்துவாரம் ஆற்றுப் பகுதியில் நேற்று முன்தினம் மீன் பிடித்துக்...