ஆன்மீகம்
சோமவார பிரதோஷ விரதம் அனுஷ்டிப்பதன் பலன்கள்!
பிரதோஷம் எந்த கிழமைகளில் வருகிறதோ அதற்கு ஏற்ப பெயரிட்டு அழைப்பார்கள். அந்த வகையில் இன்று (திங்கட்கிழமை) வரும் பிரதோஷத்திற்கு சோமவார பிரதோஷம் என்று பெயர். மேலும் இந்த பிரதோஷம் மகாலட்சுமியின் பூரம் நட்சத்திரத்தில் வருகின்றது.
எனவே இன்றைய பிரதோஷம் மிகவும் தனித்துவம் கொண்டதாக கருதப்படுகிறது. இன்றைய பிரதோஷம் சந்திரன், மகாலட்சுமி இருவரின் வழிபாட்டுக்கும் உரியதாகும். சந்திரன், மகாலட்சுமி இருவரும் பாற்கடலில் இருந்து தோன்றியவர்கள். அந்த பாற்கடல் கடைந்த நாளும் இந்த நாள்தான். பாற்கடலில் வந்த விஷத்தைத்தான் உண்டு, நீலகண்டனாகி, நல்லவற்றை மற்றவர்களுக்குத் தந்தார் சிவபெருமான். இன்றைய பிரதோஷம் இதை பிரதிபலிக்கிறது.
விரதம் அனுஷ்டித்தால் பாவங்கள் அனைத்தும் விலகும்… விரதங்களில் மிகச்சிறப்பு வாய்ந்த விரதம் சோமவார பிரதோஷ விரதம் என்று சொல்வார்கள். எத்தகைய தோஷங்களாக இருந்தாலும் இந்த விரதத்தால் அது போய்விடும். ஆயிரம் சாதாரண பிரதோஷ விரதத்தின் பலனை ஒரு சோம பிரதோஷ விரதம் தரும். எனவே இன்று முழுவதும் உபவாசம் இருந்து, மாலை சிவன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். விளக்கேற்றி, நந்தியையும் சிவனையும் வணங்க வேண்டும். இதனால் சகல துன்பங்களும் விலகும்.
#Spirituality
You must be logged in to post a comment Login