Connect with us

ஆன்மீகம்

நாளை பஞ்சமி திதி – வராஹி தேவியை விரதம் இருந்து வழிபடுங்கள்

Published

on

1790701 varahi amman

வராஹி ஆதி பரமேஸ்வரி அல்லது ஆதி பராசக்தியின் சக்தி ஸ்வரூபம். மகிஷனை அழித்த மகிஷாசுர மர்த்தினியின் குதிரைப் படை தலைவி எனவும் கூட சிலர் இவளைச் சொல்வதுண்டு. கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே அன்னைக்கு நிகரானவள். இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இந்த தெய்வத்திற்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரிப்போருக்கு கேட்ட வரங்களை மிக விரைவில் தரக்கூடியவள். சக்திவாய்ந்த தேவதையாக போற்றப்படுகிறாள் வராஹி தேவி.

மகா சக்தியாகத் திகழும் பராசக்தி, தன்னில் இருந்து ஒவ்வொரு சக்தியாக வெளிப்படுத்தினாள் என்றும் அவர்களைக் கொண்டு அசுரக் கூட்டங்களையும் தீய சக்திகளையும் அழித்தாள் என்றும் விவரிக்கிறது புராணம்.

இந்த சக்திகள் ஏழு என்றும் இவர்களை சப்தமார்கள் என்றும் விவரிக்கிறார்கள் ஸாக்த வழிபாடு செய்பவர்கள். சப்த மாதர்களில் அதீத வீரியமும் தீய சக்திகளை அழிப்பதில் வேகமும் துடிப்பும் கொண்டு ஓடோடி வருபவள் வராஹிதேவி. வராஹியை முறையே வழிபடும் பக்தர்களிடம் தோல்வி கூட தோற்றே விடும்.

குறிப்பாக, பஞ்சமி திதி, அமாவாசை திதி மற்றும் சொந்த ஜாதகத்தில் லக்கினத்திற்கு குரு 6 ஆம் இடத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று பிறந்தவர்கள் வராஹியின் காயத்திரி மந்திரத்தை வாழ்நாள் முழுவதும் முறைப்படி ஜபித்து வந்தால் மந்திர சித்துக்கள் கூட வசப்பட இடம் உண்டு.

சப்த கன்னியர்களில் ஒருவரான வராஹி தேவியை பஞ்சமியில் விரதம் இருந்து வழிபடுவது மிகச் சிறப்பு.

நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வாசனை மலர்கள் சாற்றி வாசனை தூபங்கள் ஏற்றி ஐம்புலன்களும் ஆன்மீகத்தில் ஒடுங்க மேற்கண்ட வராஹி தேவியின் காயத்திரி மந்திரத்தை பஞ்சமி திதி பிரம்ம முகூர்த்தத்தில் ஆரம்பித்து தொடர்ந்து ஜபித்து வர வேண்டும். பசும்பால் அல்லது இனிப்புகளை நிவேதனமாகப் படைக்கலாம். கண்டிப்பாக புளிப்பு இருக்கக்கூடாது. புளிப்பு அந்த அம்பாளுக்கு ஆகாது.

வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்..

1. வழக்குகள் சாதகம் ஆகி… எதிரிகளின் பலம் குறைந்து உங்களது பலம் அதிகரிக்கும். உடன், வெற்றி உங்கள் வாகை சூடும்.

2. கல்வி, தொழில் அல்லது உத்யோகம் மேம்படும்.

3. கண்திருஷ்டி, செய்வினை கோளாறுகள் அகலும்.

4. புத்தி நல்ல விதத்தில் வேலை செய்யும். இதனால் ஞானம் சித்திக்கும்.

5. பயம் தெளிந்து மனதில் துணிச்சல் – தைரியம் – தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

#Anmigam

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்21 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 26.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2024, குரோதி வருடம் ஆடி 10 வெள்ளிக் கிழமை, சந்திரன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் உள்ள மகம், பூரம்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 25.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஜூலை 25, 2024, குரோதி வருடம் ஆடி 9, வியாழக் கிழமை, சந்திரன் கும்பம் ராசியில் பூரம், சஞ்சரிக்கிறார். கடகம், சிம்ம ராசியில் உள்ள...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 24.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஜூலை 24, 2024, குரோதி வருடம் ஆடி 8, புதன் கிழமை, சந்திரன் கும்பம் ராசியில் பூரம், சஞ்சரிக்கிறார். கடகம் ராசியில் உள்ள பூசம்,...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 23.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஜூலை 23, 2024, குரோதி வருடம் ஆடி 25, செவ்வாய்க் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் உள்ள திருவாதிரை, புனர்பூசம்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 22.07.2024

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 22.07.2024 Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (ஜூலை 22, 2024 திங்கட் கிழமை) இன்று சந்திரன்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 21.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 21.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஜூலை 21, 2024, குரோதி வருடம் ஆடி...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்7 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 20.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 20.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஜூலை 20, 2024, குரோதி வருடம் ஆடி...